சுவிஸில் பெரும்பாண்மையான மக்களால் தேடி எடுத்து வாசிக்கப்பட்டுவரும் முதன்மைப் பத்திரிகைகளில் ஒன்றான சுவான்ஸ் மினித்தன் (20 நிமிடம்) பத்திரிகையினர் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் திரு.ரகுபதி அவர்களோடு நேர்காணல் .....ஒன்றை ஏற்பாடு செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்தகாலம் உட்பட தற்போதைய செயற்பாடுகள் பற்றிய பல விடையங்களை ஆராய்தனர்.
அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்து அதற்கு காரணங்களைத் தெரிவித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் திரு.ரகுபதி அவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் மீது சுவிஸ் காவல்த்துறையினரால் மேற்காள்ளப்பட்ட கைதுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்ததோடு இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக சிறீலங்கா அரசும் அவர்களோடு சேர்ந்து நிற்கும் ஒட்டுக்குழுக்கலாலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்ச்சிகள் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும்! தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் மக்களின் நலம் சார்ந்த வேலைத்திட்டங்கள் பிள்ளைகளிற்கான தாய் மொழி கற்பித்தல், விளையாட்டுக்கள், கலை பண்பாட்டு விழுமியங்கள் போன்ற விடயங்களை கருத்திற் கொள்ளாது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் சுவிஸ் அரசை விமர்சித்திருந்ததோடு ஈழத்தமிழ் மக்களிற்கு அகதி அந்தஸ்து கொடுத்து தங்க இடமளித்ததற்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment