Tuesday, November 29, 2011

சுவிஸ் தேசிய மாவீரர் நாள் 2011இல் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்!


தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈந்த எமது தேசத்தின் செல்வங்களை வணங்கும் தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள்இ மாவீரர்குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகளோடு சுவிஸ் Forum Fribourgமண்டபத்தில் (27.11.2011); வரலாறு காணாத மக்கள் நிறைந்திருக்க எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது.
தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுஇ காலத்தின் தேவை கருதி தேசியத்தலைவர் அவர்கள் 2007இ 2008 ஆம் ஆண்டுகளில் ஆற்றிய மாவீரர் உரைகள் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.


அதனைத் தொடர்ந்து மணி ஓசையுடன் பறை முழங்கிஇ துயிலும் இல்லப் பாடலுடன் அனைத்து மக்களும் சுடர் ஏந்தி மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
தாயகஇ தாய்த்தமிழக உறவுகளின் தேசிய வெளிப்பாடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டன. அத்தோடு தமிழ்க் கல்விச்சேவையினரால் நடாத்தப்பட்ட மாவீரர் ஞாபகார்த்தப்பேச்சுப் போட்டியிலும் ஓவியப் போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளரும் பெரியார் திராவிடக் கட்சியின் பொதுச்செயலாளருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி இருந்தார். அத்தோடு சுவிஸ் வாழ் கலைஞர்கள் கலைநிகழ்வுகளை எழுச்சியோடும் உணர்வோடும் வழங்கியிருந்தனர்.
இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலோடு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற எங்கள் உறுதி மொழியை அனைவரும் உரக்க எடுத்ததோடு எமது தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment