Tuesday, November 01, 2011


திருகோணமலை சிவன்கோயிலுக்கு அருகாமையிலுள்ள தமிழரசு கட்சியின் ஸ்தாபகருமான  தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலையின் தலைப்பகுதி  நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.







1977ம் ஆண்டு தமிழரசுக்கட்சி ஸ்தாபகரின் நினைவாக திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் சிவங்கோயிலுக்கு அருகாமையில் கட்டப்பட்ட உருவச்சிலை 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது சிதைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 1990ம் ஆண்டு உருவச்சிலை புனர் நிர்மானிக்கப்பட்டு அங்குள்ள கோயில் சபையினால் பரிபாளிக்கப்பட்டு வந்தது.

அதன்பிற்பாடு மூவின மக்களும் ஒன்றினைந்து வாழக்கூடிய காலகட்டத்தில் சமாதானத்தைச் சீர்குலைக்கும் முகமாக உருவச்சிலையின் தலைப்பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களைக் கொலை செய்ததுமில்லாமல் அவர்களின் சிலைகளையும் உடைப்பதென்பது தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வதற்கே உரிமையில்லாமல் இருக்கும் போது அரசியலில் என்ன வேலை இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுவதாகத் தெரிகின்றது.

காலாகாலமாக வதைபட்ட இனத்தை மீண்டும் இவ்வாறானதொரு செயற்பாடுகள் தற்கால சூழ்நிலையைக் குழப்புவதற்கும், தமிழினத்தின் நிம்மதியைக் கெடுப்பதற்குமான ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி என்று கூறவேண்டும்.

தமிழ் அரசியல் தலைவர்களை உயிரோடுதான் இருக்க விடவில்லை என்றால் இறந்த பின்னும் அவர்களின் சிலைகளை உடைப்பது மனிதநேயமற்ற செயற்பாடாகவே அமையும்.

எனவே இவ்வாறானதொரு நிலைமை இலங்கையில் தொடரும் பட்சத்தில் அது பாரிய அழிவுகளையும், பிரச்சினைகளையும் உண்டுபண்ணும் என்பது நிறுத்திட்ட உண்மை.





No comments:

Post a Comment