Friday, November 25, 2011

யாழில் மாவீரர் நாள் அன்று ஆலயங்களில் மணியடிக்ககூடாது படையினர் அறிவிப்பு!

மாவீரர் நாளினை முன்னிட்டு யாழ் குடாநாட்டு ஆலயங்களில் மணியடிக்கவோ, விழக்கேற்றவோ கூடாது என்றும் ஒலிபெருக்கிப் பாவனையை செய்யக்கூடாது என்றும் படையினர் அறிவித்துள்ளார்கள்.

தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்பணித்த மாவீரர்களின் நாளான மாவீரர் தினம் கடந்த 21 ஆம் திகதி தொடங்கியுள்ளதால் யாழில் உள்ள இந்து ஆலயங்களை நோக்கி படையினரின் நகர்வுகள் ஆரம்பித்துள்ளது.


இதுமட்டுமல்லாமல் குடாநாட்டில் உள்ள அனேகமான ஆலையங்களின் முன்பாக இராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்பட்டு மாலை 6 மணியிலிருந்து காலை 5 மணிவரைக்கும் கண் காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
வீதிகளில் மூன்று பேருக்குக் அதிகமாக சேர்ந்து நின்று கதைக்கக் கூடாது என்றும் மக்களைவிரட்டி வருகின்றனர்.
தமது அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் தமது கடும் தண்டனைக்கு உட்படுத்த படுவீர்கள்என படையினர் எச்சரித்துள்ளதாக யாழ் செய்திகள்தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment