கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மின்னேரியாவில் உள்ள இரகசிய முகாம் ஒன்றில் வைத்து புலிகளின் தளபதிகளில் ஒருவரான நகுலன் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவலாக எல்லா இணையங்களிலும் வெளியாகியிருந்தது. மின்னேரியாவில் உள்ள இராணுவ தடுப்பு முகாமில் அவர் கொலைசெய்யப்பட்டதாகா ஆங்கில இணையத்திலும் செய்திகள் வெளியாகியிருந்தது. மே 18க்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் மறைந்திருந்த நகுலனை கேணல் ராம் அவர்கள் இராணுவத்தின் வலையில் சிக்க வைத்தார் என்ற செய்திகளும் பரவலாக அடிபட்ட நிலையில், நகுலன் அவர்களின் உறவினரான திரு ரஞ்சன் ஊடாக நாம் அவரைத் தொடர்புகொண்டோம். நான் இறந்துவிட்டேனா ? அப்படி வெளியான செய்தி பொய் என்று அவர் அதிர்வுக்குத் தெரிவித்தார்.
அவர் காட்டில் இருக்கிறாரோ இல்லை இராணுவத்தின் பிடியில் இருக்கிறாரோ என்று தெரியாத நிலை காணப்பட்டாலும் அவர் இறக்கவில்லை என்ற செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். கேணல் நகுலன் அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில் தான் 2007ம் ஆண்டு இறந்ததாக செய்தி ஒன்று வந்ததையும் சுட்டுக்காட்டினார். தாம் காட்டில் இருப்பதாகவும் மழை பெய்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்து தொலைபேசி அழைப்பை அவர் துண்டித்தார்.
ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment