Friday, November 18, 2011

இலங்கைக்கு எதிரான முதலாவது தாக்குதல் மாலைதீவில் ஆரம்பமானது!

சார்க் மாநாட்டை நினைவு கூறும் வகையில் இலங்கை அரசாங்கம் சிங்க உருவிலான விசேட சிலை ஒன்றை மாலைதீவிற்கு அன்பளிப்பு செய்திருந்தது. இந்த சிலை மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நினைவுச் சின்னத்தை அண்மையில் மாலைதீவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சார்க் மாநாடு நடைபெற்ற மாலைதீவின் அடு தீவுகளில் அங்குரார்ப்பணம் செய்திருந்தார்.


வெளிநாட்டிலிருந்து சிலைகள் தருவிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்த குறித்த சிலை மீது இனந்தெரியாத நபர்கள்  கழிவு எண்ணைகளை ஊற்றியும் சேதப்படுத்தியும் தாக்குதல் நடத்தியதாகவும் கறுப்பு நிறத்திலான எண்ணெய் பூசப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, சிலை மீது தாக்குதல் நடத்தியவர்களை அந்நாட்டு எதிர்க்கட்சி தேசிய வீரர்களாக அறிவித்துள்ளதுடன் முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி முஹமட் கயூம் எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment