Friday, November 25, 2011

தமிழினப் படுகொலையாளி அனுருத்த ரத்வத்த மரணம்!

முன்னாள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தமிழினப் படுகொலையாளி அனுருத்த ரத்வத்த கண்டி பொது வைத்தியசாலை அவசர - நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

திங்கட்கிழமை நள்ளிரவு வீட்டில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததார்.

இவர் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை, கண்டிமேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோரின் தந்தையாவார்.

இவர் முன்னாள் பிரதமர் அமரர் ஸ்ரீமாவோ பண்டாரநயாக்கவின் சகோதரரும் ஆவார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புப் பிரதிஅமைச்சராக நியமிக்கப் பட்டிருந்தார்.

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற நிலையிலேயே பதவியேற்றிருந்தார்.

1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாவது ஈழ யுத்தம் ஆரம்பமான போது, விடுதலைப் புலிகளுக்கெதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவரது தலைமையின் கீழ் பிரதான பங்கை வகித்து இராணுவ நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன. அக்காலப் பகுகளில் பல யுத்த முனைகளுக்கும் நேரில் சென்றிருந்தார்.

யாழ். வடபகுதிக்கு சென்று திரும்பும் போது, அவரது உலங்கு வானூர்தி பழுதடைந்து அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் தரையிறங்கிய அந்த சம்பவத்தின்போது, சாதுரியமாக மயிரிழையில் உயிர்தப்பினார்.

1995 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டிற்குள் இருந்த யாழ்ப்பாணத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை யின்போது, இவர் முக்கிய பங்கை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
.

No comments:

Post a Comment