காலியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கடல்சார் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைத்துலக கடல்சார் கழகத்தின் பிராந்திய இணைப்பாளர் பிறென்டா பிமென்டலிடம் இதுதொடர்பாக சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி றியர் அட்மிரல் கொலம்பகே கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்துலக கடல்சார் கழகத்தின் உள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கு விசாரணை நடத்துமாறும், மாற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முறைகேடான நடவடிக்கை தொடர்பாக ஐ.நா முகவர் அமைப்பு வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக ஆராய முடியம் என்றும் றியர் அட்மிரல் கொலம்பகே கூறியுள்ளார்.
“விடுதலைப் புலிகளின் கப்பல்கள், அனைத்துலக சட்டங்களைப் பெறுமதியிழக்கச் செய்துள்ளன. அனைத்துலக கப்பல் நடவடிக்கைகள் பல சட்டங்களின் கீழ் இயக்கப்படுகின்ற போதும் விடுதலைப் புலிகள் அவற்றில் இருந்து தப்பித்துக் கொண்டுள்ளனர்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஐ.நா முகவர் அமைப்பான லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக கடல்சார் கழகத்திடம் இந்த விவகாரத்தை சிறிலங்கா கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக, அதன் பிராந்திய இணைப்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதனிடையே விடுதலைப் புலிகளால் நீண்டகாலத்துக்குத் தப்பிக் கொள்ள முடியாது, அனைத்துலக சமூகம் சிறிலங்காவின் வேண்டுகோளுக்கு விரைவிலேயே நடவடிக்கை எடுக்கும் என்று றியர் அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment