Sunday, December 04, 2011

தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன.தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
நவம்பர் 26ஆம் நாள் தேசியத் தலைவரின் 57ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 57 கிலோகிராம் எடையுள்ள கேக் வடிவமைக்கப்பட்டு விமரிசையாக அப்பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நவம்பர் 27ஆம் நாளில் மாவீரர்நாளன்று காலை எட்டு மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியை திரு.கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து தியாகி செங்கொடி நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினரின் பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்ச்இ திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழ் உனர்வாளரும், தமிழீழ ஆதரவாளருமான திரு. கொளத்தூர் மணி, தோழர்.தியாகு, மற்றும் அற்புதம் அம்மாள், திருச்சி செளந்தராசன், சி.மகேந்திரன், வேல்முருகன், பேராசிரியர் சரசுவதி, பார்வேந்தன், கிராமியக் கலைஞர் ஓம் முத்துமாரி, மல்லை சத்யா, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பல தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர்.
தாயக நேரப்படி அனைத்து நிகழ்வுகளும் கைக்கொள்ளப்பட்டன. புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட மாவீரர்நாள் அறிக்கை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் அஞ்சலி, தீபமேற்றல் என அனைத்தும் ஒழுங்குமுறையில் நிகழ்ந்தேறின. மாவீரருக்கான பொதுச்சுடரை திரு.வேல்முருகன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
கடந்த காலங்களில் இல்லாதவாறு பேரெழுச்சியோடு இடம்பெற்ற இம் மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழகத்தின் பலபாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்காண மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக பெருமளவான இளைஞர்களும், யுவதிகளும் உணர்வெழுச்சியோடு நிகழ்வில் கலந்துகொண்ட்அதோடு பெரும்பாலான நிகழ்வுகள் இளையோரால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்தமையும் அவதானிக்கமுடிந்தது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட பேரழிவும், அதன் பின்னரான மாவீரர் துயிலுமில்ல அழிப்புக்களும், தமிழர் வரலாற்று வாழ்வாதார சின்னங்கள் சிதைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டும் வரும் நிலை கண்டு கொதித்தெழுந்து தமிழினமாய் உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்கள் உணவெழுச்சியோடு போராட்டங்களையும் எழுச்சி நிகழ்வுகளையும், வீரவணக்க நிகழ்வுகளையும் நடாத்திவருவதும் அவை அதிகரித்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாள்முழுவதும் நிகழ்வுகள் இடம்பெற்றதும், புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கையின் ஒலிவடிவம் ஒலிக்கவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.















No comments:

Post a Comment