Tuesday, December 13, 2011

மனிதவுரிமை பிரகனடப் படுத்தப்பட்டு 63 வருடங்கள் நிறைவடைந்துள்ளது!

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து, அந்த போரின் போது உலகெங்கும், ஆசியா, பசுபிக் தீவுகள், ஆபிரிக்க கண்டம், ஐரோப்பிய கண்டங்கள் எங்கும் மனித நேயத்தை மதிக்காது கொடூரமான கொலைகள் நடந்த காலம், அதே காலத்தில் தான் ஆசிய கண்டமும் ஆபிரிக்கா கண்டமும் காலனித்துவ நாடுகளின் கட்டுப்பாடுக்குள் இருந்தது.
மனிதர்களின் அடிபடை உரிமை மதிக்கப்படாமல் உலகெங்கும் கிளர்ச்சிகள், சுதந்திர போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலம். 1945 ஆம் ஆண்டு
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பின், அந்த போரின்போது நடைபெற்ற மிகப்பாரிய இனப்படுகொலைக்கு, நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டு கொடூரமான படுகொலைகளை செய்தவர்களுக்கு எதிராக விசாரணைகளும், தீர்ப்புகளும் அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில் காலனித்துவத்தின் பிடிக்குள் இருந்து உலகெங்கும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து கொண்டிருந்தது. சுந்தந்திரமாக ஆளும் உரிமைகள் பல நாடுகளுக்கு கிடைத்தது.
படுகொலைகள்,அடக்கு முறையில் இருந்து இந்த உலகம் விடுபட்டு கொண்டிருந்த நேரத்தில ;"இந்த இருண்ட காலங்கள் போதும்- இனிமேல் இது வேண்டாம்" என்ற பாரிய சிந்தனையோடு 10 டிசம்பர் 1948 யில் மனிதவுரிமை பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்டது .
இந்த பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் அத்தனையும் கையொப்பமிட்டே உலக அமைப்பில் அங்கத்துவம் பெறுகிறார்கள்.
அதே நேரத்தில் 1945 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர பெறுவதற்கு முதன் னு.ளு.சேனநாய கூறிய கூற்று ஒன்றை குறிப்பிடவேண்டும். "நீங்கள் லண்டனில் இருந்து ஆளப்பட விரும்புகிறீர்களா அல்லது இலங்கையர்களாக இலங்கையை ஆள உறுதுணையாக இருக்கப்போகிறீர்களா......காங்கிரஸ் சார்பாகவும், என் சார்பாகவும் நான் இந்த நாட்டின் சிறுபான்மையினர்களுக்கு எங்களால் எந்த ஆபத்து வராது , நீங்கள் பயப்படவேண்டியது இல்லை, நீங்களும் சுதந்திரமாக இந்த நாட்டில் வாழலாம் என்று உறுதியளித்து கூறுகிறார்.
ஆனால் முன்று வருடங்கள ;கழித்து சிறி லங்கா சுதந்திரம் அடைந்தவுடன் 10 லட்சம் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.
(“Do you want to be governed from London or do you want  as Ceylonese  to help govern Ceylon? ... On behalf of the Congress and on my behalf  I give the minority communities the sincere assurance that no harm need you fear at our hands in a free Lanka.”
- Don Stephen Senanayake.
Sinhala leader at the State Council of Ceylon (Sri Lanka); November 1945>
Who 3 years later went on to disenfranchise a million Tamil inhabitants of the island.)

மனிதவுரிமை பிரகடத்தின் முதல் சரத்தே " எல்லா இன மக்களும் சமவுரிமையுடன் தமது மொழி கலாச்சாரத்தை பாதுகாத்து வாழவுரிமை உடையவர்கள் என்றே ஆரம்பம் ஆகிறது.
சிறி லங்கா சுதந்திரம் அடைத்து 63 வருடங்கள், சுதந்திரம் அடைந்த காலம் முதல் சிறி லங்காவில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுக்கொண்டிருகிறது.
63 வருடங்களாக சிறி லங்கா இந்த மனிதவுரிமை பிரகடனத்தை மதிக்காமல் மிகவும் கொடூரமான அடக்கு முறை, இன வெறி ஆட்சியை செய்து கொண்டு வருகிறது.
இந்த உரிமையை பாதுகாக்கத்தான் தமிழீழ பிரகடனம் செய்யப்பட்டது,
இந்த உரிமையை பாதுகாக்கத்தான் தமிழர்கள் அன்று தொடக்கம் உன்னதமான தியாகங்களை செய்து போராடினார்கள்.
அந்த இன வெறியில் உச்சகட்டமாக,அடக்கு முறையின் உச்ச கட்டமாக முள்ளிவாய்கால் இனப்படுகொலை இருந்தாலும், இன்றும் தொடர்ந்துகொண்டிருகிறது.

இந்த உலகம் எந்த 'இருண்ட காலம் வேண்டாம், இனி இந்த கொடூரங்கள் வேண்டாம்" என்று கூறி இந்த அற்புதமான மனிதவுரிமை பிரகடனத்தை பிரகடனப்படுத்தியதோ, அந்த மனிதவுரிமை பிரகடனம் இன்று செயல் வடிவத்தில் இல்லை.

1945யில் உலகம் கண்ட இனப்படுகொலை( ர்ழடழஉயரளவ) இன்று தொடர்ந்து கொண்டிருகிறது.
இந்த மனிதவுரிமை பிரகடன நாளில் நாம் இந்த உலகத்திற்கு சொல்லவேண்டியது, ஐக்கிய நாடுகள் சபையின் உன்னதனமான நோக்கம் திசைமாறி போகாமல் இந்த அமைப்பு நீதியாக பக்க சார்பு இன்றி செயல்படவேண்டும்.
பிரகடனங்கள் செய்யலாம் ஆனால் அதை நடைமுறைபடுத்தி இந்த பிரகடனத்தை மதிக்காத நாடுகளை கண்டித்து இதற்காகவே உருவாக்கப்பட சர்வதேச நீதி மன்றங்களில் குற்றவாளி நாடுகளின் அரச பிரதிநிதிகள் நிறுத்தப்பட்டு, இல்லையேல் இந்த ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து இப்படியான நாடுகளை ஒதுக்கி வைத்து அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களின் உரிமையை அங்கீகரியுங்கள்.

- தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு.

No comments:

Post a Comment