Monday, December 05, 2011

"சமாதானத்தைப் பற்றி பேசுகிறார்கள் , ஆனால் போர் நடாத்துகிறார்கள்"

ஆப்கனிஸ்தான் நாட்டில்  போர் ஆரம்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு  பின்னர் அடுத்தகட்ட ராணுவரீதியான நடவெடிக்கை     குறித்து ஆராய்வதற்கு சம்மந்தப்பட்ட பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் எதிர்வரும்  திங்கள் கிழமை  யேர்மனியில் Bonn நகரத்தில் மாநாடு ஒன்றை நாடாத்துகின்றனர்.

அந்த வகையில் ஆப்கனிஸ்தான் நாட்டில் இன்றுவரை அந்த நாட்டு மக்களுக்கான நலன்கள்  அற்ற சுயநல பிராந்திய அரசியலை நாடத்தும் நாடுகளை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் , உயர்கல்வி  மாணவர்கள் , தொழில்ச் சங்கங்கள்    கண்டன பேரணியில்  இணைந்து கொண்டனர்.

பல்லின மக்களுடன்   தமிழ் மக்களும் இணைந்து தமது அரசியல் நிலையையும் அத்தோடு ஈழத்தமிழர் விடையத்தில் மற்றும் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில்  சர்வதேச நாடுகள் எப்படி தமது சுயநல அரசியலை கருத்தில் கொண்டு பங்குவகித்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி துண்டுப் பிரசுரம் வழங்கி பரப்புரையில் ஈடுபட்டனர்.

கவலைக்குரியவாறு குறைந்தளவான தமிழ் மக்களே இப் பேரணியில் ஈடுபட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமன் சார்பில் யேர்மன் மொழியில் வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரம் இணைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில் வழங்கப்பட்ட பேச்சின் தொகுப்பும் யேர்மன் மொழியில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு :

www.vetd.info
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி


No comments:

Post a Comment