Saturday, December 10, 2011

கனடாவில் குடியேறிய இலங்கையர்களால் நாட்டுக்கும் நன்மை! அவர்களுக்கும் வெற்றி!!

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாசிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறியவர்களால் கனடாவுக்கு நன்மையளித்திருப்பதாகவும் அத்துடன் பல்வேறு துறைகளிலும் இன்று அவர்கள் வெற்றி பெற்றவர்களாகத் திகழ்கின்றனர் என்றும் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்துள்ளார்.


இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடாவின் நோர்த் யோர்க் நகரில் பல்லின பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடிய கனடாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு ஜெய்சன் கென்னி புகழாரம் சூட்டினார்.

கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கனடாவில் இயங்கும் தேசிய ஊடகங்களைவிடவும் பல்மொழி ஊடகங்களே இந்த நாட்டின் பல்கலாச்சாரக் கொள்கைக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன.

எனவே அவற்றையே நான் அதிகம் மதிப்பதும் படிப்பதும் உண்டு. எனக்கு புரியாத மொழிகளில் வெளிவரும் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் பற்றியும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நான் அறிந்து கொள்வேன்.

கனடாவில் குடியேறியுள்ள பல்லின மொழிசார்ந்த குடிவரவாளர்கள் பல சாதனைகளை செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் கனடாவின் பொருளாதாரா வளர்ச்சிக்கும் தங்களால் ஆன பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்கள்.

இலங்கை இந்தியா போன்ற தென்னாசிய நாடுகளிலிருந்து வந்து கனடாவில் குடியேறியவர்கள் பல்வேறு துறைகளில் இன்று வெற்றி பெற்றவர்களாக கனடாவிற்கு நன்மைகளைத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.


No comments:

Post a Comment