உலகின்
எத்தனையோ விசித்திர மனிதர்களை நீங்கள் எமது தளத்தினூடாக
பார்த்திருப்பீர்கள். அதைப்போன்று வித்தியாசமான விபரீதமான ஒரு
குறைபாட்டினைக்கொண்ட ஒரு சிறுமி பற்றிய செய்தியே இது. ஹெய்டி நாட்டில்
பிறந்த 13 வயது சிறுமி மர்லீ.
இச்சிறுமி விசித்திரமான ஒரு தோல் மற்றும்
எலும்பு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது முகத்தின் வாயை ஒட்டிய
தசைப்பகுதிகள் நீண்டு வளர்ந்து மிகவும் அபாயகரமான தோற்றத்துடன்
காணப்படுகிறது. பார்ப்பதற்கு ஒரு மாட்டின் முகத்தைப்போன்று காணப்படுவது
பார்ப்பவர்களை வியக்கவைக்கிறது. இச்சிறுமி பிறக்கும் போது சாதாரண
குழந்தைகள் போன்று ஆரோக்கியமாகவே பிறந்துள்ளார்.
இருப்பினும் சில ஆண்டுகளுக்கு பின்னரே
இவ்வாறு மூச்சுப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மாட்டின் முகத்தை போன்று
ஏற்பட்டுள்ளது. இச்சிறுமியை காப்பாற்ற இவரின் பெற்றோர் முடிவு செய்து
வைத்தியர்கள் உதவியை நாடினார்கள். வைத்தியர்களும் பெரும் சிரமத்தின்
மத்தியில் போராட்டத்தின் மத்தியில் அறுவைச்சிகிச்சை செய்து சிறுமியை
பிழைக்க வைத்துள்ளார்கள்.
இவர்களின் இந்த முயற்சியும் பெற்றோரின்
வேண்டுதலும் இக்குழந்தையை மீண்டும் உயிருடன் நடமாட விட்டுள்ளது.
இக்குழந்தையின் இந்நிலைமைக்கு காரணம் பில்லி சூனியமாக இருக்கலாம் எனவும்
தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment