Saturday, December 17, 2011

சுக் மாநிலத் தமிழர்களின் போராட்டத்தின் காரணமாக சுவர் ஒட்டிகள் அகற்றப்பட்டது, சுவிஸ் ஊடகத்தில் பரபரப்புச் செய்தி.

இனப் பிரச்சனை முற்றாக முடிவுக்கு வராத நிலையில், தமிமீழம் சிறீலங்கா அரசபயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மக்கள் இரானுவ ஆட்சிக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உல்லாசப் பயணிகள் சென்று விடுமுறை களிப்புக்களை மேற்கொள்ளளாம் என்று சுவிஸின் SBB, Travelhouse, Hotelplan, Migros போன்ற நிறுவனங்கள் விளம்பரங்களை மேற்கொண்டு வந்தனர்.
 
இச் செயற்பாட்டை புறக்கணித்து துளிகள் இளையோர் செயற்பாட்டினர் கண்டனப் போராட்டத்தை நேற்று 16.12.2011 வெள்ளிக்கிழமை பிற்பகல் 17.00 மணியளவில் மேற்கொண்டனர். இச்செயற்பாட்டை முன்னெடுத்த இளையோர்களுக்கு சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது தயாக மக்களின் நிலையை அறிந்து, தமது கடமைகளில் அக்கறை கொண்ட, துணிச்சல் கொண்ட தமிழ்மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
போராட்டம் தாக்கங்களை தோற்றுவிக்கலாம் என எண்ணி காவல் துறையினர் குவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இளைஞர்கள் திட்டமிட்ட முறையில் அமைதியாக மேற்காண்ட கவனயீர்ப்பானது காவல்துறையின் அச்சத்தை கலைத்தது. குறிப்பாக பிற்பகல் 16.00 மணிவரை இருந்த விளம்பரங்கள் கைநூல்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
சுக்கின் பிரதான சஞ்சிகையான Zuger Zeitung  நாழிதல் செய்திக்கு முக்கியத்துவம் அழித்து பரபரப்பாக வெளியிட்டது.
இது சார்ந்து கருத்துத் தெருவித்த துளிகள் செயற்பாட்டாளர்களில் ஒருவர்:
இப்படியான விளம்பரங்கள் அணைத்து மாநிலங்களிலும் காணப்படுவதாகவும் அதை அகற்ற அங்குள்ள தாயகச் செயற்பாட்டாளர்கள,; அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் எனத் தெருவித்ததுடன் இது போன்ற துளிகளின் செயற்பாடுகள் எந்த நிலை வரினும் விரிவாக்கப்பட்டு செயற்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
‘நன்றி’

No comments:

Post a Comment