Thursday, December 08, 2011

கிளிநொச்சியில் சிங்களவர்களைக் காப்பதற்காக மக்கள் மீது படையினர்தாக்குதல்


கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் மோசடியில் ஈடுபட்ட சிங்களவர்களைக் காப்பதற்காக அப்பகுதி மக்கள் மீது படையினர்தாக்குதல் நடத்தியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.

நேற்று இரவு 8 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் உள்ள மகேந்திரம் என்பவரது கடைக்கு வருகைதந்த 4 சிங்கள இளைஞர்கள் அங்கு சில பொருட்களை வாங்கிவிட்டு மீகுதிப்பணத்தினை பெற்றுக் கொண்ட பின்னரும்மிகுதிப்பணம் தரவில்லை என்று தகராறு புரிந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த கடை உரிமையாளரின் தம்பி மேற்படி சிங்கள இளைஞர்களுக்கு சிங்கள மொழியில்மிகுதிப்பணம் தரப்பட்டுள்ளது. பிரச்சனை செய்யாமல் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கூறியுள்ளார்.இதனையடுத்து உரிமையாளரின் தம்பிக்கு எந்தவிதமான காரணமும் இல்லாமல் 4 சிங்கள இளைஞர்களும் தாக்கத்தொடங்கியுள்ளனர். இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த அங்கிருந்த சிலர் மேற்படி சிங்கள இளைஞர்களைத்திருப்பித் தாக்கத் தொடங்கியவுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற சிங்கள இளைஞர்கள் அருகில் உள்ள படைமுகாம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.20ற்குமேற்பட்ட படையினருடன் வந்து அங்கிருந்த இளைஞர்களையும், குடும்பஸ்தர்களையும் கண்மூடித்தனமாகத்தாக்கினர். இது மட்டுமல்லாமல் அயலில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்த படையினர்; வீட்டில் இருந்தவர்களையும் வெளியில் இழுத்துப் பேட்டு காட்டுமிறாண்டித் தனமாக தாக்கினர்கள்.
தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் படையினரை திருப்பித் தாக்கியுள்ளனர். அங்கு நிலைமைமோசமாகவே சம்பவ இடத்திற்கு வந்த படை பொலிஸார் ( மில்ரிப் பொலிஸ் ) இரு தரப்பினரையும்சமாதனப்படுத்த முயன்ற போதும் படையினர் கடுமையாகத் தகாக்குதலைத் தொடர்ந்தனர்.படையினரின் தாக்குதல் தொடர்பாக அப் பரதேச வாசி ஒருவர் தெரிவிக்கையில் சீருடைகளுடனும் ஆயுதங்களுடனும்வந்த இராணுவத்தினர் கையில் கிடைப்பதை எல்லாம் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனுள் அகப்பட்ட 16 வயதுசிறுவன் ஒருவனை வீதியில் போட்டு சப்பாத்துக் கால்களாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் மயக்கம் போட்டுவிழும் வரை தாக்கினர்.
இத் தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து படையினரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைரும் கைதுசெய்யப்பட்டு இரவு 11 மணியளவில் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த இராணுவப் புலனாய்வினர், இச் சம்பவம் தொடர்பாக வெளியில் யாருக்கும்செல்லக் கூடாது. குறிப்பாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தக் கூடாது என்று மிரட்டியுள்ளனர்.இதுமட்டுமல்லாமல் தாக்குதலுக்கு இலக்கானவர்களைப் பார்த்து இராணுவத்திற்கு கைநீட்டும் அளவிற்கு உங்களுக்குபலம் வந்துவிட்டதா? நீங்கள் வீதியில் வைத்து சிங்களவனை அடிப்பீர்கள் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம் என்று நினைத்தீர்களா? இனிவரும் காலங்களில் இவ்வாறு நடந்தால் உங்கள் அனைவரையும்சுட்டுத் தள்ளிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர் என படைபுலனாய்வாளர்கள் எச்சரிக்கை விட்டுள்ளார்கள் இதனால் குறிப்பிட்ட பகுதிமக்கள் அச்சம்அடைந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment