நெதர்லாந்தில் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அல்மேர என்னுமிடத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் வெகு சிறப்பாக நடைபெற்றது. பொதுஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் தேசியக்கொடியேற்றல் பின் மாவீரர் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கானங்கள் இடம்பெற்றது.
அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு இன உணர்வாளர்களின் மாவீரர் உரை ஒளித்திரையில் காண்பிக்கப்பட்டது. பின் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பன இடம்பெற்றன.
அனைத்திற்கும் மேலாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கர வாதத்தடைச்சட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தமிழர்களுக்காக வாதிட்டுக்கொண்டிருக்கும் பிரபல வழக்கறிஞர் திரு விக்ரர் கொப்பே அவர்களின் துணை வழக்கறிஞர் திருமதி தமரா அவர்கள் சிறப்புவிருந்தாளராக வந்து நெதர்லாந்து மொழியில் உரையாற்ற தமிழ் உறவுகள் அனைவரும் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து இவ்வாண்டு இடம்பெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டது. மண்ணின் விடிவிற்காய் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி மண்டபம்நிறைந்த தமிழ் உறவுகள் இம்மாவீரர் நிகழ்விலே கலந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி மன நிறைவுடன் அமைதியாக நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
பரிசு வழங்கலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு இறுதியாக தமிழ் உறவுகள் அனைவரும் எழுந்து நின்று நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலைக் கைதட்டிப் பாடி 6.00 மணியளவில் நிகழ்வினை நிறைவு செய்தார்கள்.
No comments:
Post a Comment