காலமும் வரலாறுகளும் எமக்கு துரோகம் செய்த தாக ஒரு போதும் நம்பியதில்லை ஆனால் இந்தக்காலமும் எங்கள் வரலாறும் எமது போராட்டத்திற்கு துரோகம் செய்த தாக வெளியில் புலப்படுகின்றது.
அந்த உண்மை விரைவில் எதிரியும் துரோகிகளும் அறிந்து திருத்தம் அடைவார்கள் .
அந்த நம்பிக்கை இன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இதயங்களிலும் வெளிப்படுகின்றது அந்த வகையில் தான் ஒரு சிங்க இனத்தின் பிரதி அமச்சர் தெளிவுபடுத்தினார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்க் கோயிற் கிராமம் 1950 ம் ஆண்டிற்கு முன் தமிழ்க் கிராமமாக இருந்துள்ளது. 1952 ஆம் ஆண்டிற்கு பின் சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டடு அது சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான கே.டி.எஸ்.குணவர்த்தன தெரிவித்தார்.
இப்படி விபரிக்கும் போது மிகுதியான குற்றங்களை சொல்லியும் சொல்லாமல் சொன்னார்.
திருகோணமலை மாவட்ட பல்வேறு அபிவிருத்தி சம்பந்தமாக அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறிகையில்....
ஊடகவியலாளர்களுக்காக நடாத்தப்படும் இம் மாநாட்டில் எனது அனுபவ ரீதியான தனிப்பட்ட கருத்தைத் தெரிவிக்கின்றேன் என்று தனது உள்ளத்து நீதிகளை புரட்டி வெளியிட்டார்..
1952 ம் ஆண்டிற்குப் பின்னரே திருகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
கந்தளாய் போன்ற பாரம்பரியக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக கந்தளாயிலுள்ள கோயிற் கிராமம் என்னும் தமிழ்க் கிராமத்தில் ஏனைய சமூகங்கள் குடியேறியது.
இதுபோல் தான் பல மாவட்டத்திலுள்ள வேறு கிராமங்களிலும் குடியேற்றங்கள் நடைபெற்றன.
கோமரங்கடவல என்ற கிராமம் சிங்களப் பிரதேசமாக விளங்கியது.
அன்று சகோதரர்கள் போல் மூவின மக்களும் வாழ்ந்தார்கள்.
பொதுமக்கள் ஐக்கியமாகவும் மகிழ்சிகள் நிறைந்த வாழ்கையாக ஒன்றாகவும் வாழ்ந்தார்கள்.
இனவாதிகள் பிரச்சினைகளை உருவாக்கினார்கள் மக்களிடையே வேற்றுமையும் பிரிவும் ஏற்பட்டன.
இதன் காரணமாக இந்த மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம் ஏனைய அபிவிருத்திகள் குன்றத் தொடங்கின.
எனவே ...
. சிங்கள மக்களுக்கு எதிராக தூக்கப்பட்ட துவக்குக் காரணமாக என எண்ணி எல்லாச் சிங்களக் கிராமங்களும் தாக்கப்பட்டன.
பெருந்தொகையான கிராம மக்கள் தாம் குடியிருந்த கிராமங்களை விட்டு வெளியேறினார்கள்.
மூன்று இனத்தைச் சேர்ந்தவர்களும் உயிரைப் பலி கொடுத்தார்கள்.
எனவே சிங்களவன் என்ற வகையில் நான் குற்றம் சுமத்தப் போவதில்லை. 1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1979 ஆம் ஆண்டுவரை பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்தோம்.
புலிகளினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அதற்காக தமிழ் சமூகத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது. பொறுப்பாக இருந்தவர்கள் மீது தான் நாம் குற்றம் சுமத்துகிறோம்.
என்று உண்மைகளை எதார்த்தமாக வெளியிட்டார்.
இது ஒரு வகையில் தனது சமய யோசனை எடுத்து பகிர்ந்தமையானது பொதுமையான உண்மைகளை சரி வர சொன்னார்.
இதில் என்ன புரிதல் தான் முக்கியம் அல்லவா..?
No comments:
Post a Comment