தன்னை
மன்னித்து விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் யாராவது வேண்டுகோள் விடுத்தால்
அதனைத் தான் எதிர்க்கப் போவதில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்
பொன்சேகா தெரிவித்துள்ளார் எனவும் ஆனால், சரத் பொன்சேகாவின் குடும்பத்தினர்
எவரும் அவரின் விடுதலை குறித்த கோரிக்கை எதனையும் முன்வைக்கமாட்டார்கள்
என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க
தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை இன்று சந்தித்துப் பேசிய பின்னரே திஸ்ஸ
அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ள கோரிக்கையைக் கொழும்பு, கொம்பனித் தெரு, கங்காராம விகாரையின் விகாராதிபதி, கலபொட ஞானேஸவர தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளார்.
No comments:
Post a Comment