இதன்கீழ் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள விடுதலைப்புலி
உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிங்கள
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் போர்க் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஏழு முக்கிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களில், போர்க் குற்றச் செயல்கள் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் சபை அமர்வுகளில், இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்த ஏழு நாடுகள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்த நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பற்றிய தரவுகளை புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர்.
இதில் நாற்பது புலி உறுப்பினர்கள் யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் அம்பலப்படுத்தும் எனவும் சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சில விடுதலைப்புலி உறுப்பினர்களை வெளிநாட்டுத் தூதுவர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களில் அழைத்துச் சென்றுள்ளதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை கைது செய்ய சர்வதேச பொலிஸார் பிடிவிராந்து பிறப்பித்த போதிலும், குறித்த நாடுகள் குற்றவாளிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment