விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானின் சகோதரர்
யாழ்ப்பாணம் சென்றவேளை அவரை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் அடித்துக்
கொலைசெய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. பொட்டம்மானுக்கு 3 ஆண்
சகோதரர்கள் உள்ளார்கள். குறிப்பிட்ட இந்தச் சகோதரர் ஜேர்மனியில்
வசித்துவந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவருக்குச் சொந்தமான காணியும் ஒரு
வீடும் உள்ளது. இதனை இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கு
நெருக்கமான சிலரே உரிமைகொண்டாடி வந்துள்ளார்கள். இக் காணியையும் வீட்டையும்
மீளப் பெறவே அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது.
இவ்வாறு யாழ் சென்ற அவரை புலனாய்வுப் பிரிவினர் பல தடவை கூப்பிட்டு விசாரித்துள்ளார்கள். குறிப்பாக பொட்டு அம்மான் தொடர்பாகவே அவர்கள், அவரது அண்ணாவை விசாரித்தார்கள் என்பது ஒரு புறம் இருக்க நேற்றைய தினம்(22) இரவு இவரது உடல் அரியாலையில் ஒரு கிணற்றிற்கு அருகாமையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொட்டம்மானின் அண்ணா மாரடைப்பால் தான் மரணமடைந்தார் என்று சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் தாம் மருத்துவர் போல கூறியிருக்கிறார்கள். இருப்பினும் அவர் முகத்திலும் கைகளிலும் அடி காயங்கள் இருப்பதாக அயலவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை எவ்வித பரிசோதனைகளையும் மேற்கொள்ளாது, மரணச் சான்றிதழை வழங்க போலீசார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ,இவரது உடல் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. இவர் மரணம் தொடர்பாக பொலிசார் முன்னுக்குப் பின் முரணான தகவலை வெளியிட்டு வருவது பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. எது எவ்வாறு இருப்பினும், இவர் இலங்கை புலனாய்வுத்துறையால் இரகசியமாகவும், மிகவும் புத்திசாலித்தனமாகவும் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாளை மறுதினம் இலங்கைக்கு நவனீதம் பிள்ளை செல்லவுள்ள நிலையில், மெளனமாக இக் கொலை நடந்தேறியுள்ளதா என்ற சந்தேகங்களும் வலுக்கிறது.
source:athirvu
No comments:
Post a Comment