வணக்கம் . ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையின் தலைமையில் நடைபெறவிருப்பதா
அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தை (
CHOGM ) தடுத்து நிறுத்தி இலங்கை அரசை காமன்வெல்த் அமைப்பிலிருந்தே நீக்க
வேண்டும் . காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டம் இலங்கையில்
நடைபெறுமானால் , இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக் கூடாது
உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி , தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின்
பொது செயலாளர் தோழர் தியாகு ‘ இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு
இயக்கத்தின் ‘ சார்பாக அக்டோபர் முதல் நாள் துவங்கிய பட்டினிப் போராட்டம்
இன்று 12 வது நாளாக தொடர்ந்து நடை பெற்றுவருகிறது .
அக்டோபர் 7 ம் நாள் தோழர் தியாகு அரசு மருத்துவர்கள் குழு ,
காவல்துறையினரால் ராயப்பேட்டை அரசு மருத்துவமணைக்கு அழைத்துச்
செல்லப்பட்டார் . குளுகோஸ் மற்றும் உணவு ஊட்டத்தை மறுத்துவிட்டு தோழர்
தியாகு தனது பட்டினிப் போராட்டத்தை மருத்துவமனையிலும் பட்டினிப்
போராட்டத்தைத் தொடர்ந்ததால் , அக்டோபர் 10 ம் நாள் மருத்துவர்கள அவரை
மருத்துவமனையைவிட்டு வெளியேற்ற செய்வதாக கூறினார்கள் .ஆனால் மருத்துவமணையில் இருந்த நாட்களிலும் தோழர் தியாகு உணவு / குளுகோஸ் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கான வெளியேற்ற சுருக்கமாக தரவேண்டும் என்று கேட்டபோது , மேலிடத்திலிருந்து வெளியேற்றம் சுருக்கத்தை தரக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . இதைத் தொடர்ந்து தோழர் தியாகு , தனக்கு உணவூட்டம் அளிக்கப்படவில்லை என்பதற்கான அறிக்கை தராமல் , தான் மருத்துவமணையைவிட்டு வெளியில் செல்ல முடியாது என்று அறிவித்துவிட்டார் . இதனால் நேற்று அக்டோபர் 11 ம் நாள் மருத்துவமணையின் அறிக்கையுடன் தோழர் தியாகு வெளியேற்ற செய்யப்பட்டார் . தொடர்ந்து .. உழைக்கும் மக்கள் மாமன்றம் என்ற தொழிற்சங்கக் கட்டிடத்தில் தனது பட்டினிப் போராட்டத்தை 12 வது நாளாகத் தொடர்ந்துவருகிறார் ….


No comments:
Post a Comment