index
ஈழ விடுதலைப்போருக்கு அத்திபாரம் அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர் என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகரில் ம.தி.மு.க., சார்பில் நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கான  செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது
ஈழ விடுதலைப் போருக்கு அத்திபாரம் அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இவர் ஈழத் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் உதவியவர். தற்போதைய லோக்சபா தேர்தலில் பலம் வாய்ந்த சக்திகளுடன் மோத உள்ளோம்.
தேர்தலில் பொலிஸ் பாதுகாப்புடன் பணம் செலவழிக்கப்படும். சாதாரண தொழிலாளி, விவசாயி கொண்டு செல்லும் பணத்தைக்  கூட பொலிஸார், தேர்தல் ஆணையகம்  நடவடிக்கை எடுக்கச் சொன்னதாகக் கூறி பறித்துகொண்டு நீதிமன்றில் ஒப்படைப்பர். புதிய வாக்காளர்களைச் சேர்க்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.