Tuesday, October 15, 2013

லண்டனில் இனி தமிழில் லைசன்ஸ் பரீட்சை எடுக்க முடியாது !


லண்டனில் வசிக்கும் பல்லின மக்கள், தமது தாய் மொழியில் சாரதி அனுமதிப் பத்திர(லைசன்ஸ்) பரீட்சையை எடுக்க ஏதுவாக பிரித்தானிய அரசு இதுவரை காலமும் ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதற்காக பிரித்தானிய அரசு பெருந்தொகைப் பணத்தையும் செலவிட்டு வந்தது. சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், தமது தாய் மொழியில் இப் பரிட்சைகளை எடுக கூடியதாக இதுவரை காலமும் இருந்தது. ஆனால், 2014ம் ஆண்டு முதல் இந்த முறையை தாம் நிறுத்தவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் பலரால் பாவிக்கப்படும் மொழிகளில் தமிழும் ஒன்றாகும். இதன் அடிப்படையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தமிழர்கள் தமது தாய் மொழியில் அதற்கான பரீட்சையை எடுக்கும் வாய்ப்பு இது நாள் வரை இருந்தது.


ஆனால் வரும் , 2014ம் ஆண்டு முதல் பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானியா உட்பட பல மொழிகளில் எடுக்கக்கூடியதாக இருந்த இந்தப் பரீட்சையானது ஆங்கில மொழியில் மட்டுமே இனி எடுக்க கூடியதாக மாறவுள்ளது. எனவே லண்டனில் வசிக்கும் தமிழர்கள் , யாராவது சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறவிரும்பினால், உடனே விண்ணப்பித்து பெற்றுக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment