அட புலிகள் போர் புரிந்தார்களே அது நல்ல விடையம் தானே அதற்கு என்ன தடை என்று யோசிக்க வேண்டாம். இவர் நாசுக்காகக் குறிப்பிடுவது புலிகள் செய்த போரை மட்டுமல்ல. அவர்கள் கொலைசெய்ததாகக் கூறப்படும் மனிதர்களையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறார். அதாவது இவர் தெரிவிக்க வரும் கருத்து ராஜீவ் கொலைபற்றியது தான். இக் கொலை தொடர்பாக கமலுக்கு பெரும் சங்கடம் இருக்கிறது. ஆனால் எங்கே வாயை திறந்து மாட்டிக்கொள்வோமோ என்று பயமும் உள்ளது. இவர் நடிக்கும் படங்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் வசூல் ஆவதுபோல வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களாலும் மேலும் பணம் வசூல் ஆகிறது அல்லவா ! இதனால் அவர்களை பகைத்துகொள்ள முடியாமல் மற்றும் மனதில் உள்ள விடையத்தை வெளியே சொல்லவும் முடியாமல், மறு -பக்கம் .... மறு -பக்கம் என்று பேசியிருக்கிறார் கமல் !
உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை ஏன் பேசவேண்டும் ?
No comments:
Post a Comment