இன் நிலையில் திபெத்திய பிரஜை ஒருவர், சீனாவின் முன் நாள் அதிபர் ஹு -ஜின்டாவோவுக்கு எதிராக ஸ்பெயின் நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இதனை விசாரிக்க அன் நாட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பிட்ட இந்த விசாரணையில் ஹு -ஜின்டாவோ குற்றவாளி என்று இனங்காணப்பட்டால், அவரை கைதுசெய்ய பிடிவிராந்து பிறப்பிக்கப்படலாம். அது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் செல்லுபடியாகும். எனவே அவர் குறிப்பிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லமுடியாத நிலை தோன்றும். இன் நிலை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மகிந்தார் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதால், பல நாடுகளில் அவருக்கு பாதுகாப்பு இருக்கிறது. இக் கவசமானது அவர் மேல் எவரும் வழக்கு தொடரவோ இல்லை கைது நடவடிக்கையில் ஈடுபட தடையாக உள்ளது.
ஆனால் அவர் பதவியில் இருந்து இறங்கிய மறு நிமிடமே ஆபத்து அவரை சூழ்ந்துகொள்ளும் என்பதில் ஐயமில்லை. காரணம் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தத்தமது நாடுகளில் மகிந்தருக்கு எதிராக வழக்குகளை தொடருவார்கள். சீன முன் நாள் அதிபர் ஹு -ஜின்டாவோ குறித்த வழக்கு எவ்வாறு செல்கிறது ? என்பது தொடர்பாக தமிழர்கள் மிகவும் உண்ணிப்பாக அவதானித்து வருகிறார்கள்.
நன்றி.
தமிழ் நெட்.காம்
SOURCE:ATHIRVU
No comments:
Post a Comment