ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை
ஆதரித்து வாக்களிக்குமாறு சில நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்தியதாக இலங்கை
அரசாங்கம் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இலங்கைக்கு
எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமாறு அமெரிக்கா சில நாடுகளுக்கு அழுத்தம்
கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவிட்டால், அந்நாடுகளை அமெரிக்கா
எச்சரித்திருக்கும். சில நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு
வழியில்லை. ஏனெனில் அந்நாடுகள் அமெரிக்காவுடன் வலுவான பொருளாதார உறவுகளைக்
கொண்டுள்ளன என அம்பாந்தோட்டையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற
கூட்டமொன்றில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்தார்.
இதனை நிராகரித்துள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஜூலியானா ஏ
ஸ்பாவன், சர்வதேசத்திலிருந்து தெளிவான செய்தி கிடைத்துள்ளதாக
குறிப்பிட்டார். அச்சுறுத்தல் விடுக்கவில்லை. உண்மையில் ஐ.நா மனித உரிமைகள்
சபையிலிருந்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கை நல்லிணக்கம், பொறுப்பு
அர்த்தமுள்ள, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சர்வதேச சமூகம்
கோரிக்கை விடுக்கின்றது என்றார்.
soruce:seithy
No comments:
Post a Comment