Sunday, March 30, 2014

அமெரிக்க தீர்மானத்திற்கு வாக்களிக்காமைக்கு முக்கிய காரணம் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்

News Serviceஈழத் தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காகவே அமெரிக்க தீர்மானத்திற்கு வாக்களிக்காமைக்கு முக்கிய காரணம் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். இந்து சமயப்பேரவையின் தலைமையகத்தில் நேற்றுக் காலை இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கத்திற்கான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

 
இலங்கை அரசிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கான வாக்கெடுப்பின்போது இந்தியா ஏன் விலகியது என்று இந்திய அரசாங்கம் தெளிவாக கூறியுள்ளது. அந்த கருத்துக்கு விளக்கம் கூறி நான் குழப்ப விரும்பவில்லை. தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசும் போது இந்தியா விலகிவிடுகின்றது என்று.இங்கு உரையாற்றிய வணிகர் கழகத்தலைவர் ஜெகசேகரம் கூறியிருந்தார். வாக்கெடுப்பின்போது இந்தியா நடுநிலையாகயிருந்தது. ஆனால் விலகிவிடவில்லை. ஈழத்தமிழர்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் இந்தியா தலையிடமுடியும் என்பதை இங்கு கூறிவைக்கவிரும்புகின்றேன்.
யாழ்.பொது நூலகத்திற்கும் புல்லுக் குலத்திற்கும் இடையில் 1300 மில்லியன் ரூபா செலவில் யாழ்.கலாசார மையம் ஒன்றினை அமைத்து இந்தியா இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளது. அத்துடன், இந்தியாவின் நிதியுதவியில் சுமார் 350 மில்லியன் ரூபா செலவில் திருக்கேதீச்சர ஆலயத்தின் சிற்பங்கள், மண்டபம் என்பன புனரமைக்கப்படவுள்ளன. எனக்கு பிறகு யாழ்ப்பாணத்தில் நடராஐன் என்பவர் யாழ்.இந்தியத்துணைத்தூதுவராக பணிபுரியவுள்ளார். பிரிட்டிஸ் கயானாவில் நான் பணிபுரிய உள்ளேன். இதை நான் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் யாழ்ப்பாணம்தான். யாழில் நான் 3 வருடம் கடமையாற்றியதை எண்ணி பெருமையடைகிறேன்.
தூதரகத்தின் சாதாரண வேலைகளுக்கு அப்பால் மாவட்ட வளர்ச்சியில் எனது பங்கு இருந்தமை மகிழ்ச்சி. அனுபவம் என்பது ஒரு அறிவு அதனை தந்தது யாழ்ப்பாணம் என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment