Thursday, April 24, 2014

தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க வலியுறுத்தல்

கர்நாடகத் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க முன்வர வேண்டும் என்று, அந்த மாநில தமிழ் மொழிச் சிறுபான்மையினர் நலப் பேரவை வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தப் பேரவை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகத் தமிழ் மொழிச் சிறுபான்மையினர் நலப் பேரவையின் பொதுக் குழு கூட்டம், கோலார் தங்கவயலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 2014-15-ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்: தலைவர்- பிரான்சிஸ் போர்ஜியா, துணைத் தலைவர்-ஆ.ஜேம்ஸ்பால், செயலர்- இரா.கு.அரங்கசாமி, துணைச் செயலர்- ஆ.இர.புஷ்பராஜ், பொருளர்-மு.நாகரத்தினம், செயற்குழு உறுப்பினர்கள்- எரியீட்டி, வி.ஆர்.சேகர், சுப.சீத்தாராமன், இளங்கதிரவன், ஆரோக்கியதாஸ், ஜெகன்மார்ஷல்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கர்நாடகத்தில் இயங்கி வரும் ஆங்கில வழி தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம், கன்னடம் ஆகியவற்றுடன் தமிழையும் படிக்க மாநில அரசு அரசாணை (எஞ சர்:ஓதச-ஆஎ.எடஞ-25.ஈற்:10ற்ட் அல்ழ்ண்ப், 1994 ஹய்க் உஈ-28-டஎஇ-94 ஆஹய்ஞ்ஹப்ர்ழ்ங்.ஈற்:29.4.1994) பிறப்பித்துள்ளது.

எனவே, கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி தொடக்கப் பள்ளியில் ஆங்கிலம், கன்னடம் ஆகியவற்றுடன் தமிழும் கற்றுக் கொள்ள வகை செய்ய வேண்டும். பல மாணவர்கள் அவர்களது தாய் மொழியான சம்ஸ்கிருதம், உருது, தெலுங்கு போன்ற மொழிகளை கற்கின்றனர். அதுபோல தமிழர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை மொழிப் பாடமாகப் போதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 sorce:dinamani 24-4-14

No comments:

Post a Comment