அடுத்தவாரம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் நடத்தவுள்ள சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வரும் வியாழக்கிழமை காலை வெளிநாட்டு இராஜதந்திரிகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன்போது, சிறிலங்கா அரசாங்கத்தினால், வெளியிடப்பட்டுள்ள, 16 அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்கள் மீதான தடை அறிவிப்புக் குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள நபர்களையும், அனைத்துலக காவல்துறை மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 40 பேரையும் எங்குள்ளனர் என்று தேடிப்பிடித்து, சிறிலங்காவுக்கு கொண்டு வருவதற்கு உதவும் படி, இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் உடன்பாடு நடைமுறையில் இல்லாத நாடுகளும் கூட பயனுள்ள விதத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரியான சாதிக் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஈரானுடன் கைதிகள் பரிமாற்ற உடன்பாட்டை சிறிலங்கா செய்து கொள்ளாத போதிலும், ஈரானில் கைது செய்ய்ப்பட்ட நந்தகோபன், மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கிருந்து சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.source:PP
No comments:
Post a Comment