சிறிலங்காவுக்கான
நான்கு நாள் பயணத்தை ஆரம்பித்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்
சண்முகம் நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நேற்று கொழும்பை வந்தடைந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சண்முகம், வரும் 5ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
இன்று அவர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவார்.
அத்துடன்,
சிங்கப்பூரில் உள்ள தெற்காசிய கற்கைகள் நிறுவகத்துக்கும், கொழும்பிலுள்ள
அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர்
நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்படும்
நிகழ்விலும் அவர் பங்கெடுப்பார்.
நாளை வடக்கு மாகாணத்துக்குப்
பயணம் மேற்கொள்ளவுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், ஆங்கில மொழி
தொர்பாடல் தொடர்பான ஒரு ஆண்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார்.
சிங்கப்பூர் அனைத்துலக நிறுவகம் மற்றும் தேசிய நூலக சபை என்பன இணைந்து யாழ். பொதுநூலகத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.
அத்துடன்,
இளைஞர் வள நிலையம் மற்றும், நடமாடும் பேருந்து நூலகம் என்பனவற்றையும்
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் அன்பளிப்புச் செய்யவுள்ளார். |
No comments:
Post a Comment