Wednesday, April 02, 2014

Progressive student front Tamil youths and students federation

இன்று காலை பா.ஜ.கவிற்கு தமிழக மாணவர்கள் சார்பில் எச்சரிக்கை:-

ஒன்று பட்ட இலங்கையை ஆதரிக்கிறோம் என்று தங்கள் அற்க்கையில் தெரிவித்த பா.ஜ,க வை கண்டிக்கின்றோம்!!!

ஈழ பிரச்சனையில் பா.ஜ.க வின் கொள்கையை மாற்றி தனி ஈழதிர்க்கு ஆதரவு என அறிவிக்க வேண்டும்..
அடுத்த ஆண்டு ஐ.நா கூட்டத்தொடரின் பொழுது ஒருவேளை பா.ஜ.க ஆட்சியில் இருந்தால் இலங்கைக்கு எதிரான இனப்படுகொலை தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் தாக்கப் படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையும் கச்சதீவை மீட்டுத்தருவதர்க்கான உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.

தமிழகத்தின் உயிர் கொள்கைகளான மொழிக் கொள்கையிலும்.சம நீதிக் கொள்கையான இட ஒதுக்கீட்டு கொள்கையிலும் தங்கள் நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும்.

இந்திய அரசாங்கம் வெளியுறவு கொள்கையை வகுக்கும் பொழுது தமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.

இசுலாமிய மற்றும் மற்ற மத சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்.

டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையான மீத்தேன் பிரச்சனையும் கூடங்குளம் அணுஉலை பிரச்சனையிலும் தங்களின் நிலைபாட்டை தமிழர்களுக்கு ஆதரவாக அறிவிக்க வேண்டும்.

ஆகிய எட்டு நிபந்தனைகளுடன் கூடிய எச்சரிக்கை கடிதத்தை தமிழக பா.ஜ.க’வினரிடம் தமிழக மாணவர்களின் சார்பாக இன்று (01.04.2014) ஒப்படைத்திருக்கிறோம்.

இன்னும் 48-மணி நேரத்தில் தமிழர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை பாரதிய ஜனதா கட்சி எடுக்க தவறிய பச்சத்தில், பா.ஜ.க க்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை மாணவர்கள் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு தமிழர் விரோத மத்திய கட்சிகளை தமிழகத்தை விட்டு துடைத்து எறிவோம்!

இவை அனைத்தையும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் ஒப்புதலுடன் தரவேண்டி கேட்டுள்ளோம்!

முற்போக்கு மாணவர் முன்னணி !
தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் கூட்டமைப்பு !

#######################################################################


No comments:

Post a Comment