Monday, November 22, 2010

யாழ். வடமராட்சியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!


யாழ். வடமராட்சியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மர்மமான  முறையில்  காணாமல் போய் இருந்த  குடும்பஸ்தர் ஒருவர் இன்று கோவில் ஒன்றுக்கு அருகில் உள்ள பற்றை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 ஒரு பிள்ளையின் தந்தையான புலோலி வட மேற்கு பிரதேசத்தைச்  சேர்ந்த வடிவேலு செல்வரட்ணம் (வயது-48) என்பவரே மந்திகை கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள பற்றை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இருக்கின்றார்.

 வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த இவர் திரும்பி வரவே இல்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இவரை தேடி வந்திருக்கின்றனர்.  ஆலய சுற்றுசூழலில் துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.   இச்சம்பவம் இப்பிரதேசத்தில் மிகுந்த பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment