அனைத்துலக செய்தி நிறுவனமான அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் பணியாளர்கள் சமர்ப்பித்த நுளைவு அனுமதிப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கான காரணங்களை அது தெரிவிக்கவில்லை.
சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைகள் தொடர்பான செய்தி ஆய்வு ஒன்றையும், அதற்கு ஆதாரமான புகைப்படங்களையும் கடந்த புதன்கிழமை அல்ஜசீரா செய்தி நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது. அதனால் ஆத்திரமடைந்த சிறீலங்கா அரசு அதன் செய்தியாளர்கள் சிறீலங்காவுக்குள் நுளைவதற்கு தடை விதித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் சிறீலங்காவுக்கு வருவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சகத்தின் தொடர்பகப் பணிப்பாளர் பத்துல ஜெயசேகரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment