கார்த்திகை விளக்கீட்டிற்கு தீபமேற்றச் சென்றவர்கள் மீது படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளமை கண்டிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழர் பகுதிகளில் விளக்கீடு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு தமிழர் பாரம்பரியமான நிகழ்வாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழ்.மாவட்டம் ஆகியவற்றில் சில இடங்களில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் அளவெட்டி மற்றும் பளை,சோரன்பற்று, வடமராட்சி கிழக்கு போன்ற பகுதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதேபோல் கிளிநொச்சியில் வட்டக்கச்சியில் படையினர் காட்டு மிராண்டித்தனமாக நடந்துள்ளனர்.
இதில் வீதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வட்டக்கச்சியில் ஆறுமுகம் வீதியில் பாடசாலை மாணவர் முதல் தாக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வீதியால் சென்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவரும் மறிக்கப்பட்டு அவர் பயணித்த வாகனத்தின் ஆவணங்களை சோதித்த படையினர் அவரை உளரீதியாக பாதிக்கும் வகையில் நடத்தியுள்ளனர்.
இவ்வாறன செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும். இந்த நிலையில்தான் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இது வடக்கில் இராணுவ ஆட்சியொன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதை காட்டுகின்றது.
இது எங்களின் பாரம்பரிகங்கள் கலாச்சாரங்களை சிதைக்கும் ஓரு செயற்பாடாகும் என்றார்.
No comments:
Post a Comment