Monday, November 22, 2010

இலங்கை மீது அமெரிக்கா-இங்கிலாந்து குற்றச்சாட்டுக்கள்! .

சிறீலங்காவின் அரசியல் நிலைமைகள் தொடர்பில், அமெரிக்காவும்

இங்கிலாந்தும் பெரும் கவலையடைந்திருக்கிறது. சர்வதேச மதங்களின் சுதந்திரம், தொழிலாளர்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்காவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இலங்கையின் மதங்களுக்கான சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகவுக்கு ஆதரவு தெரிவித்து, மல்வத்த மற்றும் மகாநாயக்கர்கள், மகா சங்கத்தினர் 2010 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தவிருந்த மாநாட்டை, குண்டு வைக்க தகர்க்கப்போவதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அமெரிக்க நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, தங்களது இலக்கினை அடைவதற்கான கடுமையான போராட்டம் நடத்திய புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டு விட்ட நிலையில், சிறுபான்மை தமிழர்களுடன் சமரசத்துடன் வாழ வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாது நாட்டினது பெரும்பான்மை சிங்களவர்கள் மிடுக்குடன் நடந்துகொள்வதாக, இங்கிலாந்தின் the economist தெரிவித்திருக்கிறது.



No comments:

Post a Comment