Thursday, December 09, 2010
புதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி - சனல்4
ஊடகவியளாளரும் இசை, நடன கலைஞருமான இசைப்பிரியாவை சிங்கள இராணுவத்தினர் படுகொலை செய்த காட்சி ஒன்றை புதிய தகவல்களை உள்ளடக்கி சனல்4 இன்று வெளியிட்டுள்ளது.
மிகவும் கொடூரமான முறைகளில் இசைப்பிரியாவை கொலை செய்துள்ளனர் படையினர். வெளிவந்துள்ள இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டதை காணொளிகளில் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது எனவே இசைப்பிரியாவை படையினர் மிகவும் கோரமாக சித்திரவதை செய்துள்ளதாக சனல்4 செய்தி வெளியிட்டுள்ளது.
இசைப்பிரியாவின் படுகொலை பற்றி சனல்4 க்கு பேட்டியளித்த இசைப்பிரியாவின் தோழியும் முன்னாள் போராளியுமான கல்பனா என்பவர் கூறுகையில், இசைப்பிரியாவை எனக்கு 9 வருடங்களாக தெரியும், அவர் ஒரு புலி உறுப்பினர் அல்ல, அவர் ஊடகத்துறையில் பணியாற்றி வந்த ஒரு இசைக்கலை, நடனக்கலையை நன்கு பயின்ற சாதாரண பெண்மணி, அவரை மிகவும் கேவலமான முறையில் படையினர் சித்திரவதை செய்தமை மன்னிக்க முடியாததொரு போர்க்குற்றமாகும்,
இலங்கை படையினரின் வன்முறைகளை உலக நாடுகளுக்கு காண்பித்து அம்பலப்படுத்த வேண்டும். இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபா. இவர் ஊடகத்துறையில் பணியாற்ற வந்தமையால் இவருக்கு வழங்கப்பட்ட பெயரே இசைப்பிரியா. இவருக்கு வயது 27. 53வது படையணியினரால், கடந்த வருடம் மே 18இல் இசைப்பிரியா கொல்லப்பட்டார் என இலங்கை அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment