இதில் பல சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் பொதுமக்களையும் இளைஞர்களையும் இவ்வாறு ஏன் நிலத்தில் இருத்தி வைத்திருக்கின்றனர் என்ற பெரும் கேள்வி இங்கே எழுந்துள்ளது. தற்போது இந்த இளைஞர்களும் பொதுமக்களும் எங்கே? இவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லை கொலை செய்யப்பட்டுள்ளனரா என்பது போன்ற விபரங்கள் இதுவரை எவருக்கும் தெரியாது.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தற்போது ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் துணைத் தூதுவராகப் பதவியேற்று உள்ளார். கடந்த யுத்தகாலப் பகுதியில் இவர் பல பொதுமக்களைக் கொலை செய்யக் காரணமாக இருந்த முக்கிய போர்க்குற்றவாளியாகக் கருதப்படுபவர். யேர்மன் மக்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும். போர் குற்ற ஆதாரங்கள் பல வெளியாகியுள்ள நேரத்தில் இது தொடர்பாக யேர்மன் அரசுடன் தமிழர்கள் உடனடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இப் போர் குற்ற காட்சிகளைச் சமர்ப்பிக்கவேண்டும்.
No comments:
Post a Comment