Sunday, December 12, 2010

ஆறு மாதக் குழந்தையின் தாயான இசைப்பிரியா எவ்வாறு ஆயும் ஏந்திப் போராடியிருக்க முடியும்


சிறீலங்கா அரசின் 53 ஆவது படையணியினரிடம் சரணடைந்த ஊடகவியலாளர் சோபா (27) எனப்படும் இசைப்பிரியா, போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது.அவருக்கு லெப். கேணல் தர பதவியையும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.

ஆனால் எந்தவித ஆயுதப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளாத இசைப்பிரியா தன்னை முழுமையாக ஊடகப்பணிகளில் ஈடுபடுத்தியிருந்தார். வன்னியில் இடம்பெற்ற போரில் மக்கள் அடைந்த துன்பங்களை அனைத்துலக ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணிகளையே அவர் முதன்மைப்படுத்தியிருந்தார்.

மேலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சிறீலங்கா படையினரின் தாக்குதலில் சிக்கி இசைப்பிரியாவின் ஆறு மாதக் குழந்தையும் பலியாகியிருந்தது.

எனவே ஆறுமாதக் குழந்தையை பெற்றெடுத்த இசைப்பிரியா ஒரு வருடத்திற்கு மேலாக கர்ப்பம் தரித்த நிலையிலேயே இருந்திருப்பார். கர்ப்பம் தரித்த நிலையிலும், ஆறுமாதம் நிரம்பிய குழந்தையை கொண்டுள்ள நிலையிலும் அவரால் எவ்வாறு ஆயுதம் ஏந்தி போராட முடியும்? என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அரசின் பொய்யான பரப்புரைகள் அனைத்துலக மட்டத்தில் தோல்வியை கண்டுவரும் சந்தர்ப்பத்தில், இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பாக திரட்டப்படும் தகவல்கள் முக்கிய பங்கை வகித்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment