Thursday, December 16, 2010

தமிழர்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறது தமிழகஅரசு: சீமான் ஆவேசம் (காணொளி)

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. நேற்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

அதன் பிறகு புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்..அதன் காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.


��புதுவையில் கவுன்சிலர் சக்திவேல், தேவமணி, லோகு அய்யப்பன் ஆகியோரை, திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் புதுவை அரசு கைது செய்து இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தை புதுவை அரசு தவறாக பயன்படுத்துகிறது. சொந்த ஊரில் இலங்கை தமிழர்கள் வாழ முடியவில்லை. என்னை 2 தடவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கைது செய்து இருக்கிறது.

பின்பு நீதி மன்ற உத்தரவின் பேரில் வெளியே வந்து விட்டேன். தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் ஈழ தமிழர்கள் மீது விரோத போக்கை கடைபிடித்து அடக்கி, ஒடுக்கி வைக்க அவர்கள் நினைக்கிறார்கள். இன்னும் 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. அப்போது ஈழ தமிழர்கள் பிரச்சனைகளை முன்வைத்து பணியாற்றுவோம்.


No comments:

Post a Comment