Wednesday, December 08, 2010


பொலனறுவையின் பிரதான பாடசாலையொன்றின் மாணவிகள் ஐவர் கர்ப்பம் தரித்த நிலையில் பாடசாலைக்கு சமூகமளித்துக் கொண்டிருந்த விடயம் அம்பலமானதில் பிரதேச மக்கள் ஆடிப் போயுள்ளனர்.

கர்ப்பம் தரித்த மாணவிகளில் இருவர் ஏற்கெனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் காரணம் அப்பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள வெளிமாவட்டங்களைச் சோ்ந்த இராணுவத்தினர் என்பது தான் இதிலுள்ள அதிர்ச்சிகரமான விடயமாகும்.

அதற்கு மேலாக பன்னிரண்டு மாணவிகள் திருமணத்துக்கான சட்டபூர்வமான வயதை எட்டாத காரணத்தால் இணைந்து வாழும் (டiving together) முறையில் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டு, பாடசாலைப் படிப்பையும் தொடர்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.அவ்வாறான மாணவிகளின் பெற்றோரும் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அத்தகவல்கள் மூலம் மேலதிகமாக தெரியவருகின்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மட்டுமே இவ்வாறான பாலியல் சீர்கேடுகள் நடைபெறுவதாக இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

அப்பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் அதிகமாக இருக்கும் நிலையில் இராணுவத்தினரால் பதின்ம வயது யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்தப்படும் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக அந்த ஆய்வு மேலும் சுட்டிக் காட்டுகின்றது.

சிங்களப் பிரதேசங்களிலேயே இந்த நிலையென்றால் தமிழர் பிரதேசங்களிலும் இவ்வாறான அத்துமீறல்கள் நடக்கலாம். காணாமல் போவதும், கடத்துவதும் நிறைந்த யாழ் பிரதேசங்களில் மாணவிகள் கவனமாக செயற்பட வேண்டும் என்பது அறிவுறுத்தலாக அமையவேண்டும்.

No comments:

Post a Comment