சிறீலங்கா அரசு நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டத்தை நீக்குவதுடன், உயர் பாதுகாப்பு வலையங்களும் அகற்றப்பட வேண்டும் என தென்ஆசிய மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்க வெளிவிவகார துணைச் செயலாளர் றொபேட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை தளர்த்தவேண்டும். தடுப்புமுகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை அது வெளியிடவேண்டும்.
முகாம்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியானது. ஆனால் சிறீலங்கா அரசு தனது தடுப்புக்காவலில் உள்ள அனைவரினதும் விபரங்களை வெளியிடவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அமைதி ஏற்படும்.
வடபகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலையம் அகற்றப்படவேண்டும். புதிய தலைமுறையின் தலைவர்களை முதன்மைப்படுத்தியதாக வடக்கில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும்.
வடக்கில் அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புக்களுக்கும் அனுமதிகள் வழங்கப்படவேண்டும்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் நாம் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குவுக்கு அனுசரணைகள் வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழில்: ஈழம் ஈ நியூஸ்.
No comments:
Post a Comment