இந்திய தமிழ் நாடு மாநிலத்தில் அகதி முகாம் ஒன்றில் வாழும் இலங்கை பெண் ஒருவர் அவரது மகனை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் ஒன்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எட்டயபுரம் கிராமத்துக்கு அருகில் உள்ளது தாப்பாத்தி கிராமம். இங்கு இலங்கை அகதிகள் முகாம் ஒன்று இருக்கின்றது. இம்முகாமில்தான் இராஜேந்திரன்-யோகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
இராஜேந்திரன் கூலித் தொழிலாளி. யோகேஸ்வரியின் மகன்மாரில் ஒருவரான மணிகண்டன் சில நாட்களாக காணாமல் போய் இருந்தார். இதுகுறித்து யோகேஷ்வரியின் உறவினர்களில் ஒருவரான மகேஸ்வரன் விசாரித்து உள்ளார்.
மகனை அனாதை விடுதியில் சேர்த்து இருக்கின்றார் யோகேஸ்வரி சொல்லி இருக்கின்றார். யோகேஸ்வரியின் பதிலில் சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் கிராம அதிகாரி ஒருவரிடம் முறைபாடு செய்து இருக்கின்றார்.
அக்கிராம அதிகாரி மார்சார்பட்டி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் யோகேஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போதே மணிகண்டனை மண்ணுக்குள் உயிரோடு புதைத்தமையை ஒப்புக் கொண்டார்.
மணிகண்டன் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார்.சிகிச்சை அளித்தும் பலன் ஏற்பட்டு இருக்கவில்லை. மருத்துவ செலவுதான் அதிகமாகிக் கொண்டே சென்றது மணிகண்டனுக்கு உடல்நிலை சரியாகும் என்ற நம்பிக்கையை இழந்து இருக்கின்றார் யோகேஸ்வரி.
முகாமுக்கு அருகில் உள்ள மரத்தடி ஒன்றின் கீழ், குழி தோண்டி உயிருடன் புதைத்து விட்டார். பின்னர் யாருக்கும் தெரியாமல் முகாமுக்கு வந்து சேர்ந்தார்.
No comments:
Post a Comment