Tuesday, January 25, 2011

நாடு கடந்த அரசு மாவீரர்களின் கனவுகளை நனவாக்கும்!


[ செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010, 07:44.06 பி.ப | இன்போ தமிழ் ]

நாடு கடந்த தமிழீழ அரசு மாவீரர்களின் கனவுகளை நனவாக்கப் பிறந்த ஒரு குழந்தை. இக் குழந்தையின் பெற்றோர்கள் நமது மாவீரர்களே

 அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் வணக்க நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரை 
  •  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
    அனைத்துலகப்பரப்பில் தனது ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்கிறது. நாம் முன்னோக்கி வைக்கும் ஒவ்வொரு காலடியும் மாவீர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போராடினார்களோ அந்த இலட்சியத்தை நோக்கியதாகவே அமையும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இப் புனித நாளில், உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் நமது மாவீர்களுக்கு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நமது மாவீர்களின் ஈகமே தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உயிர்நாடியாக இருந்து விடுதலைத் தணலை நமது நெஞ்சமெல்லாம் நிறைத்து நிற்கிறது. போராட்டத்தின் அடித்தளமாக இருந்து நம்மை வழிநடாத்தி வருகிறது. இம் மாவீரர்களின் ஈகம் ஒருபோதும் வீண்போகப் போவதில்லை. இவ் ஈகச்சுடரொளி நமது தேசம் விடுதலை அடைந்த செய்தியினை என்றோ ஒருநாள் உலகெங்கிலும் பரவச் செய்து நிற்கும் என்பது திண்ணம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்களின் கனவுகளை நனவாக்கப் பிறந்த ஒரு குழந்தை. இக் குழந்தையின் பெற்றோர்கள் நமது மாவீரர்களே. மாவீரர்கள் ஈழத்தமிழ் மண்ணில் வாழ்ந்த வாழ்வின் நினைவுகளையும், அவர்களது வீரச்சாவு நமக்குக் கூறும் செய்திகளின் கனதியினையும் நன்கு புரிந்துகொண்டுதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகப்பரப்பில் தனது ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்கிறது.

நாம் முன்னோக்கி வைக்கும் ஒவ்வொரு காலடியும் மாவீர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போராடினார்களோ அந்த இலட்சியத்தை நோக்கியதாகவே அமையும்.

மாவீரர் தமது குருதி சிந்திய அந்தத் தமிழீழத் தாயக மண்ணில் நமக்கென்றொரு தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை நமது முன்னோக்கிய பயணம் என்றும் ஓயப்போவதில்லை. என குறிப்பிடும் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் வி.உருத்திரகுமாரன்அவர்கள் ஆற்றிய உரையின் முழுவடிவம் காணொளி இணைப்பில்




வாருங்கள்  வடம்பிடிக்க...
Uploaded by valarytv. - Up-to-the minute news videos.

No comments:

Post a Comment