Tuesday, February 08, 2011

யாழ்ப்பாணத்தில் பெளத்த மதத்தில் சேர்ந்தால் உடனடி வேலை வாய்ப்பு


யாழ்ப்பாணத்திற்கு பெளத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால நாளை மறுதினம் வருகைதரவுள்ளார் என மானிப்பாய் தொகுதி பெளத்த மத இணைப்பாளர் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


யாழ் மாவட்டத்தில் பெளத்த நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்வதற்காக இவர் வருகைதரவுள்ளார் என தெரியவருகின்றது. யாழ் நாகவிகாரையில் புதன் கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 40 பொளத்த குருமார்கள் வருகை தரவுள்ளார்கள். இங்கு சேரும் அங்கத்தவர்களுக்கு இவர்கள் பெளத்தமதம் பற்றிய பயிற்சி அளிப்பார்கள் எனவும் தெரியவருகின்றது. மானிப்பாய் பகுதியில் பெளத்த பாடசாலை ஒன்றையும் திறந்து வைப்பார்கள் என தெரியவருகின்றது. அத்துடன் இவ்வாறு புத்தூர், அச்சுவேலி பகுதிகளுக்கும் பாடசாலைகள் விஸ்த்தரிக்கபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். தமது சங்கத்தில் சேரும் இளைஞர் யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment