திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல இராணுவ முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளதி மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் சிற்றூர் படைமுகாம், அநுராதபுர மாவட்டத்தில் ஹொரவப்பொத்தானை படைமுகாம், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிக்கல மற்றும் வாகரைப் பிரதேசங்களில் அமைந்திருந்த படைமுகாம்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த முகாம்களில் உள்ள இருந்த படையினர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இந்த முகாம்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் படைத்தரப்பைச் சேர்ந்த 200 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மன்னம்பிட்டி வீதியில் ஏழு அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்வதால் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டியுள்ளதாகவும், கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளதி மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேரா தெரிவித்தார் |
No comments:
Post a Comment