Sunday, February 20, 2011

தமிழீழ தேசத்தின் மகா அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்.

தமிழீழ தேசத்தின் மகா அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இறையடி எய்தினார். எமது தேசியத் தலைவர் மேதகு திரு. வேலுப்பிள்ளi பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம். வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.


தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத் தேசத்தின் மகா அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின் அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment