கடந்த தோ்தல்களில் மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை, இருந்தும் நாங்கள் அதற்காக இனவாதம் பேசுவதில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
நாடுதழுவிய ரீதியில் 2000 குளங்களைப் புனரமைக்கும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு குளங்களைப் புனரமைக்கும் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஜனாதிபதித் தோ்தலில் மட்டுமன்றி 2010 ஜனாதிபதித் தோ்தலிலும் மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை. ஆயினும் நாட்டின் ஏனைய பிரதேசங்கள் போன்று இங்கும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாங்கள் இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் இனவாதம் பேசுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றார்கள். ஆயினும் எங்களிடம் ஒருபோதும் இனவாதம் இருந்தது கிடையாது.
இன்று சிலர் இனவாதம் பேசிக் கொண்டு திரிகின்றார்கள். மக்கள் அவர்கள் தொடர்பில் தான் அவதானமாக இருக்க வேண்டும். அவர்களால் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என்றும் அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment