[ சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011, 07:26.19 AM GMT ]
கிளிநொச்சியில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை ராஜபக்ஷ குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டுச் சோ்ந்து கொள்ளையடிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் தற்போதைக்கு அப்பிரதேசத்தில் சுமார் 1300 ஏக்கர்
காணிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கென ராஜபக்ஷ குடும்பத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அதனையொத்த அளவிலான காணிகள் ராஜபக்ஷ குடும்பத்தின் நண்பர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் அங்குள்ள பொதுமக்களுக்கு உரித்தானதும், உறுதிப்பத்திரம் உடையதுமான காணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. காணிகளுக்கு உரியவர்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்தனர்.
அவ்வாறான நிலையில் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்குப் பதிலாக காட்டுப் பிரதேசங்களில் அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சியின் பெறுமதியான காணிகள் மற்றும் எதிர்காலத்தில் வர்த்த நோக்கில் பெறுமதியை எட்டவுள்ள காணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவே ஆளுங்கட்சிக்கு வழிகாட்டியாக செயற்படுவதாகவும், காணிகளை இழந்த மக்களுக்கு ஒட்டுசுட்டானில் மாற்றுக் காணி வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை வழங்கியதும் அவர் தான் என்பதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment