இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகள் 254 போ் கடந்த 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் வழியில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதன் பின் அவர்கள் 2009ம் ஆண்டின் அக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரை பின்டான் எனும் இடத்தில் டான்ஜங் பினாங்க் எனும் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த காலத்தில் அவர்கள் பல தடவைகள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களையும் நடாத்தியிருந்தனர்.
அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கில்லார்ட் இந்தோனேசிய ஜனாதிபதி சுசில பம்பாங் யுதாயனோவுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றை அடுத்து பிரஸ்தாப இலங்கைத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்வதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
அதனையடுத்து அவர்களை விடுவிக்க இந்தோனேசியா இணக்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment