Saturday, March 05, 2011

இந்தியாவில் நடைபெற்ற பிரத்தியங்கிரி காளி யாகத்தில் இலங்கை எம்.பி சீ.யோகேஸ்வரன்

Photo


உலகில் இயற்கையாலும் செயற்கையாலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிர் அழிவுகள் நீங்கி மனித சமூகம் சாந்தி சமாதானத்துடன் வாழவேண்டும் என்றும் இலங்கை தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்துவரும் துன்பங்கள் நீங்கி ....
..
.அவர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றும் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அதன் நகரான மைசூர் மன்னன் அரண்மனை அருகாமையில் உள்ள பிரத்திரியங்கிரி காளி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற ஒருநாள் பிரத்திரியங்கிரி காளி மகாயாகத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திசபை பிரதித் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

அத்தோடு யாகம் முழுவதிலும் பரிபூரணமாக பற்றுபற்றி இலங்கை தமிழ் மக்களுக்கு நிம்மதி வேண்டி பிரார்த்தித்தார். இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக இந்தியாவில் டில்லி பகுதிக்கான பொலிஸ் ஆணையாளர் திரு.உமேஸ் கொயில் அவர்களும் பாலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.சுகையீர் இந்துமத ஆச்சிரமங்களின் சுவாமி வணக்கத்துக்குரிய ஸ்ரீ இளைய ஆழ்வார் மத பீடாதிபதிகள் மதகுருமார்கள் பொது அமைப்பக்களின் பிரதிநிதிகள் ஆலய தர்மஹர்த்தா சபைகள் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வை “பாபா” சுவாமிகளின் தொண்டனும் ஆன்மீக சேவையாளனுமான மைசூரைச் சேர்ந்த திரு.ஏ.அமர்தாப் (ளுரிசநஅழ தலைவர்) அவர்கள் ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார். அத்தோடு பல அரசியல் சமூக சமய பிரதிநிதிகள் மேலும் இந்தியாவில் இலங்கை நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து அகதிமுகாமில் வாழும் இரண்டு இலட்சம் தமிழர்களில் அங்குள்ள மாணவர்கள் கல்வியை மேன்படுத்திக் கொண்டிருக்கும் ஈழதமிழர் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் ஈழநேரு அவர்களும் இலங்கை தமிழ் மக்களின் பெரும் சேவகரும் திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரும் இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்காக பெரும் தொண்டாற்றி வரும் திரு.எஸ்.நடேசப்பிள்ளை அவர்களும் அதிதியாக கலந்து கொண்டும் பல நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டனர்.
Content of Popup
Home Email this

No comments:

Post a Comment